கத்திரி இந்தியாவில் இருந்து உலகம் முழுக்க பரவிய ஒரு காய். கிட்டத்தட்ட 4000 ஆயிரம் ஆண்டுகளாக நாம் விளைவித்து உண்ணும் காய். 1901 இல் உருவான மொன்சாண்டோ நிறுவனம் உருவாக்கி தரும் விதைகளை கொண்டு கத்திரி பயிர் செய்யலாமா என்று அரசு கேட்கிறது. நல்லா வேலையாக இன்று அமைச்சர் திரு ரமேஷ் அவர்கள் மொன்சாண்டோ விதைகளை தட்போதைக்கு தடை செய்துள்ளார். அரசு இதை எக்காலத்திற்கும் தடை செய்யவேண்டும். காரணம்: 1 நம்முடைய முன்னோர் பாடுபட்டு சேர்த்த விதைகள் அழியும். 2 அமெரிக்க நிறுவன விதைகளின் பின்விளைவுகள் நமக்கு தெரியாது 3 நம்முடைய விவசாயம் மழை மற்றும் மொன்சாண்டோ விதைகளை சார்ந்து இருக்க வேண்டும் 4 உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நாம் அதை இழப்போம். (உலக கத்திரி உற்பத்தியில் 26 % நம்முடையது ) 5 விவசாய நிலம் அதனுடைய விளைச்சல் தன்மையை இழக்கும். மொன்சாண்டோ இதை கண்முடித்தனமாக விற்க முயற்சிப்பதன் காரணம் என்ன? மொன்சாண்டோ உலகம் முழுக்க கடை பரப்பி உதை வாங்கி விட்டு இந்தியா வந்துள்ளது. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல நாம் உள்ளோமா என்ன? http://www.monsanto.com/pdf/investors/supplemental_too
Chartered Accountant specializing in Indirect Tax Compliance & Litigation, Management Consultancy and Internal Controls