கத்திரி இந்தியாவில் இருந்து உலகம் முழுக்க பரவிய ஒரு காய். கிட்டத்தட்ட 4000 ஆயிரம் ஆண்டுகளாக நாம் விளைவித்து உண்ணும் காய்.
1901 இல் உருவான மொன்சாண்டோ நிறுவனம் உருவாக்கி தரும் விதைகளை கொண்டு கத்திரி பயிர் செய்யலாமா என்று அரசு கேட்கிறது. நல்லா வேலையாக இன்று அமைச்சர் திரு ரமேஷ் அவர்கள் மொன்சாண்டோ விதைகளை தட்போதைக்கு தடை செய்துள்ளார். அரசு இதை எக்காலத்திற்கும் தடை செய்யவேண்டும்.
காரணம்:
1 நம்முடைய முன்னோர் பாடுபட்டு சேர்த்த விதைகள் அழியும்.
2 அமெரிக்க நிறுவன விதைகளின் பின்விளைவுகள் நமக்கு தெரியாது
3 நம்முடைய விவசாயம் மழை மற்றும் மொன்சாண்டோ விதைகளை சார்ந்து இருக்க வேண்டும்
4 உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நாம் அதை இழப்போம். (உலக கத்திரி உற்பத்தியில் 26 % நம்முடையது )
5 விவசாய நிலம் அதனுடைய விளைச்சல் தன்மையை இழக்கும்.
மொன்சாண்டோ இதை கண்முடித்தனமாக விற்க முயற்சிப்பதன் காரணம் என்ன? மொன்சாண்டோ உலகம் முழுக்க கடை பரப்பி உதை வாங்கி விட்டு இந்தியா வந்துள்ளது. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல நாம் உள்ளோமா என்ன?
http://www.monsanto.com/pdf/investors/supplemental_toolkit.pdf
மேலே உள்ள மொன்சாண்டோ வலை பக்கத்தில் இருந்து முதளிடலர்கல்லுக்கு நிதி மற்றும் தொழில் நிலவரம் பற்றிய விபரம் படியுங்கள்.
கடந்த 2008 ஆம் வருடம் மொன்சாண்டோவின் ஒரு பங்கு 3 .62 டாலர் ஈட்டியது. அதுவே 2009 ஆம் ஆண்டில் 3 .80 டாலர் ஈட்டியுள்ளது.
2005 முதல் 2008 வரை முறையே $0.47 , $1 .25 ,$ 1.79 என்று மிக விரைவாக உயர்ந்த லாபம் விகிதம் 2009 இல் குறைந்துள்ளது. ஆக நம் நாட்டை போன்ற பறந்து விரிந்த நிலபரப்பில் வியாபாரத்தை அதிகபடித்தினால் லாபம் உயரும்.....
இந்திய மக்கா சோழ விதை வியாபாரத்தில் மொன்சண்டோவின் பங்கு 37 % என கூறுகிறார்கள் மொன்சாண்டோ நிறுவனத்தினர். கத்திரியின் வரலாறு அழிவதற்கு முன் நாம் கருத்து பரிமாற்றம் முலம் நம் மக்களை ஒன்றினைபோம். நம் கத்திரியை காப்போம்.
இந்த லிங்கில் உள்ள கருத்து படத்தை அவசியம் காணவும் :
http://www.hulu.com/search?query=the+future+of+food&st=0
Comments
catch my scribblings at:
http://encounter-ekambaram-ips.blogspot.com/
happy blogging.